நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் உண்டு. குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒருவர் யூடியூப்பிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷின் நண்பராக படம் முழுக்க வருகிறவர் விஜய் வரதராஜ். படம் பார்த்தவர்கள் அவரது காமெடியை ரசித்து பாராட்டுகிறார்கள். அடிப்படையில் விஜய் யூடியூப் நடிகர்.


அவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 'டெம்பிள் மங்கிஸ்' என்ற பெயரில் யூ டியூப்பில் சேனல் ஒன்றை தொடங்கினார். நாட்டு நடப்புகளை கலாய்த்து, சிறு சிறு வீடியோக்களை தயாரித்து அந்த சேனலில் வெளியிட்டார். அவற்றில் அவரே நடித்தார். பல வீடியோக்கள் செம ஹிட்டானது. இது பலரது கவனத்தையும் டெம்பிள் மங்கி சேனல் நோக்கி திரும்பியது. இதை ஜி.வி. பிரகாஷ் ரெகுலராக பார்த்துள்ளார்.
 
எனக்கு இனொரு பேர் இருக்கு படத்தில் முதலில் ஒரு பிரபல காமெடியன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜி.வி. பிரகாஷ்குமார் இயக்குனர் சான் ஆண்டனி அழைத்து விஜய்யின் வீடியோக்களை காட்டியுள்ளார். அது அவருக்கும் பிடித்துப்போக ‘எனக்கு இனொருபேர் இருக்கு' படத்தில் காமெடியனாக அறிமுகமாகிவிட்டார். இனி தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் விஜய் வரதராஜன் லட்சியம்.


Find out more: