இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். பின்னர் அதை பாகுபலி முறியடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களை முறியடிக்கும் வகையில் பாகுபலி-2 இன்னும் பிரம்மாண்டமாகவும், 2.0அதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி-2 படமும், 2.0 படமும் ஒரேநாளில் ரிலீசாகப்போவதாக செய்தி வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் பாகுபலி-2 வில்லனான ராணா.


இதுகுறித்து அவர் கூறியதாவது. "2.0 படம், பாகுபலி-2வுடன் கண்டிப்பாக மோதாது. 2.0 படத்தின் ஷூட்டிங் மட்டுமல்ல, விஷுவல் பணிகளும் அதிகம் இருக்கிறது. பாகுபலி படம் வரலாற்று படம், அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பாகுபலி-2 ரிலீசாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.



Find out more: