ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைப்பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி சென்றபோது அங்குள்ள அரசு அவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது. அதோடு படப்பிடிப்பு நடத்துவதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தது. அதனால், எந்தவித அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கபாலி படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பும் மலேசியாவில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் ஒரு சண்டை காட்சிக்கான லொகேஷனை மலேசிய அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் கண்டு பிடித்தார்களாம். அதில் படமாக்க அத்தனை எளிதில் அனுமதி கிடைக்காது என்று கூறப்பட்டதாம்.
ஆனால் விக்ரம் படப்பிடிப்பு என்றது உடனே கொடுத்து விட்டார்களாம். அதனால் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் மலேசியாவில் முகாமிட்டு இருமுகன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் ஆனந்த் சங்கர். ஆக, ரஜினியை அடுத்து விக்ரமிற்கும் மலேசியாவில் வரவேற்பு கிடைத்துள்ளது.