சென்னை:
"அப்பா" படம் கொடுத்த வெற்றியால் செம மகிழ்ச்சி மூடில் இருக்கிறார் சமுத்திரகனி... இந்த உற்சாகத்தோட ஜெயம்ரவியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை வேலையில் படு மும்முரமாக இறங்கிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது சமுத்திரகனியின் "அப்பா". வெளியிட்ட இடங்களில் நல்ல வசூலையும் தரமான படம் என்ற பெயரையும் தட்டிச் சென்றுவிட்டது. இதுபோன்ற படங்கள் வெளிவந்து எத்தனை காலம் ஆகிவிட்டது என்ற சிறந்த விமர்சனங்களும் படத்துக்கு கிடைத்து விட்டது.

இந்த சந்தோஷத்தோடு ஜெயம் ரவியோடு இணையும் அடுத்த படமான தொண்டனை உற்சாகமாக செதுக்கி வருகிறாராம் சமுத்திரகனி. இந்த படம் மேலும் சிறப்பாக வரணும் என்பதற்காக கதையில் தீவிர கவனம் செலுத்தி வர்றாராம்... வர்றாராம்...
தற்போது போகன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து 'தொண்டனில்' தான் நடிக்க இருக்கிறார். இதுல ஒரு விஷயம் என்னன்னா? இந்த படத்துல தன்னோட நண்பனும், இயக்குனருமான சசிகுமாரை தான் நடிக்க வைக்கலாம் என்று இருந்தாராம் சமுத்திரகனி. ஆனால் அவர் செம பிஸியாக இருப்பதால் ஜெயம் ரவி வந்து சேர்ந்துட்டார்.