ஐதராபாத்:
ஹாலிவுட் படத்திற்கு பிரபல வில்லன் நடிகர் முக்கிய கதாபாத்திரத்திற்கு தன் குரலை கொடுத்து இருக்காராம்.. அதாங்க டப்பிங் பேசியிருக்காராம்... யார் தெரியுங்களா அந்த வில்லன். எந்த ஹாலிவுட் படம் தெரியுங்களா?


ஜீராஸிக் பார்க்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கோட அடுத்த படம்தான் 'The BFG'. இது உலகம் முழுவதும் வர்ற 15ம் தேதி ரிலீஸ்.


 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்து இந்த படம் திரைக்கு வருது. இதோட தெலுங்கு பதிப்பிற்குதான் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கேரக்டருக்கு "வாய்ஸ்" டப்பிங்ப்பா... டப்பிங் கொடுத்துள்ளார்.


இவரு ரஜினியோட 'லிங்கா', இப்ப விஜய் நடித்து வரும் தலைப்பு வைக்காத படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரோட குரல் அந்த கேரக்டருக்கு செமத்தியாக பொருந்தியிருக்காம்... பொருந்தியிருக்காம்...



Find out more: