சென்னை:
என்ன? நானா? நானா? டென்ஷனான வருத்தப்படாத வாலிபர் சங்க நாயகி ஆடிய ருத்ர தாண்டவத்தில் கதை சொல்ல வந்த இயக்குனருக்கு மயக்கம் வராத குறைதான்... பிடித்தாராம் ஓட்டம்...


ஊதா கலரு ரிப்பன்னு ரசிகர்கள் கொண்டாடிய இந்த நடிகைக்கு தற்போது கைவசம் படங்கள் இருக்கு. காதல் கதைகளாக பார்த்துதான் நடித்து வருகிறார். 


இவரை பார்த்து கதை சொல்ல வந்து இருக்கார் ஒரு இயக்குனர். சரி கதை கேட்போம் என்று சுவாரசியமாக கேட்க ஆரம்பித்த நடிகைக்கு ஆந்திரா மிளகாயை கடித்தது போல் ஆகிவிட்டது.


அந்த இயக்குனர் ஆரம்பித்த உடனேயே இந்த கதையில் நீங்கள் 3 வயது குழத்தைக்கு தாயாக நடிக்கிறீகள். அதுவும் படத்தின் கடைசி 15 நிமிடங்கள் மட்டும் தான் என்று சொல்லி முடிப்பதற்குள் நடிகையில் முகம் சிவந்து கண்கள் ரௌத்ரமாகி விட்டது. 


அவரோட ருத்ரதாண்டவத்தை பார்த்து குலைநடுங்கி போன இயக்குனர் பிடித்தாராம் ஓட்டம். இப்போ நடிகை வீட்டுக்கு முன்னாடி நிற்க கூட பயப்படறாராம் அந்த இயக்குனர்.


Find out more: