சென்னை:
மாகாபா ஆனந்த் நடித்திருக்கும் 'அட்டி' படத்தில் விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் நடிச்சிருக்காராம்... நடிச்சிருக்காராம்...
ஆரம்பத்தில் இருந்தே தனது நண்பர்களுக்காக விஜய் சேதுபதி ஏகப்பட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கிடையில் இவரது சில படங்கள் தோல்வியை தழுவ... கவுரவத் தோற்றத்தில் தோன்றுவதைத் தவிர்த்து, தன்னுடைய படங்களில் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார்.
அட்டி

இப்போது மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் 'அட்டி' படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் இறக்கை கட்டி அடிக்கின்றன.
வட சென்னை பகுதியில் நண்பர்கள் வழக்கமாக சந்திக்கு இடங்களை அட்டி என்று கூறுவார்களாம். ஈசியாக ரீச் ஆகும் என்பதால் இதையே இயக்குனர் விஜய பாஸ்கர் தலைப்பாக வைத்து விட்டாராம். வரும் 7ம் தேதி இந்த படம் வெளியாகிறது.