சென்னையில் சமீபத்தில் வெளியான படம் 'ராஜா மந்திரி'. இதில் நடித்துள்ள ஷாலினி சோயா கூறியதாவது: மலையாளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். அதில் சில படங்களை பார்த்த டைரக்டர் உஷா கிருஷ்ணன் 'ராஜா மந்திரி'யில் நடிப்பதற்கு வாய்ப்பு தந்தார். 


இந்த படத்தில் எனது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது. கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அப்படி நடிக்கமாட்டேன். நடிப்பு திறமையுள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். 'ரெவிலேஷன்', 'ஸீட்டா டூ சீக்' என்ற இரண்டு குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். 


அதற்கு விருதுகளும் கிடைத்தது. சில மலையாள இயக்குனர்கள் எனது குறும்படத்தை பாராட்டினார்கள். இப்போது நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறேன். எதிர்காலத்தில் படம் இயக்கும் ஆசையும் எனக்கு இருக்கிறது. இவ்வாறு ஷாலினி சோயா கூறினார்.  



Find out more: