'ஈட்டி','கணிதன்' படங்களுக்குப் பிறகு அதர்வாவின் மார்க்கெட் ஓரளவு சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது 'ருக்குமணி வண்டி வருது','செம போதை ஆகாத' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதையடுத்து 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக மதுரையில் தங்கியுள்ளார் அதர்வா. 


இதற்கு முன்பு முழுநீள காமெடி கதைகளில் நடித்திராத அதர்வா முதன்முறையாக இந்த படத்தில் காமெடி நாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அதர்வாவுடன் காமெடி கூட்டணி அமைத்திருப்பவர் சூரி. இதற்கு முன்பெல்லாம் நடிகர்களின் பெயரைக் கேட்டு படங்களை ஒத்துக் கொண்டு வந்த சூரி, சமீபகாலமாக கதையும் கேட்கிறார். காரணம் காதல் காமெடிக்கு எந்த அளவுக்கு ஸ்கோப் உள்ளது என்பதை கவனித்து தான் அவர் கால்சீட் கொடுக்கிறார்.


அந்த வகையில், இந்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கதையை கேட்டதும் ஓகே பண்ணி விட்ட சூரி, இதற்கு முன்பு சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன்,விமல் போன்ற நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் காமெடி காட்சிகளில் நடித்தது போன்று இந்த படத்தில் அதர்வாவுடனும் கலக்கலான காமெடிக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் கைகோர்த்திருக்கிறாராம்.



Find out more: