நட்சத்திர நடிகர் மற்றும் நடிகைகள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரித்த படங்கள் வேறு ஒரு நடிகர் நடிகைகளுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பாலிவுட்டில் முக்கியமான நட்சத்திரங்கள் நிராகரித்த படங்களை பார்ப்போம்.
1.கத்ரினா கைப் நிராகரித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
2013ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்'ல் தீபிகா ஒரு தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தை சில காரணங்களால் கத்ரினா கைப் நிராகத்தார்.
2.கங்கனா ரனட் நிராகரித்த ‘டர்ட்டி பிக்சர்’
வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர் படம் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டது மற்றும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் ஹாட் படம் என்பதால் கங்கனா இப்படத்தை நிராகரித்தார்.
3.கத்ரினா கைப் நிராகரித்த ‘யே ஜவானி ஹாய் தீவானி’
கத்ரினா கைப் நிராகரித்த மற்றோரு படம் ‘யே ஜவானி ஹாய் தீவானி’. இப்படம் தீபிகாவின் வாழ்க்கையில் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் கத்ரினா இப்படத்தை இழந்தார்.
4.அக்ஷய் குமார் நிராகரித்த 'பாக் மில்கா பாக்'
மில்கா கதாபாத்திரம் அக்ஷய் குமாருக்கு நிச்சயமாக பெரிய விஷயமில்லை. ஆனால் அவருக்கு தேதிகள் இல்லாத காரணத்தால் இப்படத்தை நிராகரித்தார். எனவே இப்படத்தில் பார்ஹான் நடித்து வெற்றி கண்டது. ஆனால் அந்த நேரத்தில் அக்ஷ்ய்க்கு அவர் நடித்து வெளிவந்த 'காம்பாக்ட் இஷ்க்' மற்றும் 'டீஸ் மார் கான்' படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
5.ஷாருக்கான் நிராகரித்த ‘லகான்’
அமீர் நடித்த ‘லகான்’ படம் மிகப்பெரிய வெற்றியையும் மற்றும் ஆஸ்கர் படமாகவும் அமைந்தது. இது ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ஹார்ட் ப்ரேக்கர் ஆக இருக்கும். ஏனெனில் ஷாருக் தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படத்தை நிராகரித்தார்.
6.சல்மான் கான் நிராகரித்த ‘சக்டே இந்தியா’
ஷாருக்கான் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் ‘சக்டே இந்தியா’. இப்படம் முதன் முதலில் சல்மான் உடன் கையெழுத்திடப்பட்டது. எப்படியோ இப்படம் ஷாருக்கானுக்கு கைமாறியது.
7.ட்விங்கிள் கான்னா நிராகரித்த ‘குச் குச் ஓட்ட ஹாய்’
இப்படத்தில் ஒரு விருந்தினர் மற்றும் சக்தி வாய்ந்த பங்காக ராணி முகர்ஜீ நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாகவும் மாறியது. ஆனால் ட்விங்கிள் ஏன் இப்படத்தை நிராகரித்தார் என்று தெரியவில்லை.
8.அமீர் கான் நிராகரித்த 'டர்'
ஷாருக்கான் வாழ்க்கையில் சிறந்த படமாக 'டர்' படம் இருக்கிறது. ஆனால் இப்படம் எதிர்மறை கதாபாத்திரமாக இருந்ததால் அமீர் கான் இப்படத்தை நிராகரித்தார்.
9.கத்ரினா கைப் நிராகரித்த ‘பர்பி’
ப்ரியங்கா, ரன்பீர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த ‘பர்பி’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் இலியானாவிற்கு நல்ல ஸ்கோப் நிறைந்த படமாக இருந்தது. இப்படத்தை ஏன் கத்ரினா கைப் நிராகரித்தார் என தெரியவில்லை.
10.விவேக் ஓபராய் நிராகரித்த 'ஹம் தும்'
ரோம்-காம் ஐ பின்தொடர்ந்த சத்யாவிற்கு, பிறகு விவேக் ஓபராய் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களுக்காக விவேக் ஓபராய் இப்படத்தை நிராகரித்தார். இப்படத்தில் சைப் அற்புதமாக நடித்துள்ளார்.
11.ரித்திக் நிராகரித்த ‘தில் சாத்தா ஹை’
‘தில் சாத்தா ஹை’ படத்திற்காக முதல் தேர்வாக ரித்திக் இருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக அவர் இப்படத்தை நிராகரித்தார். அமீர் கான் வழக்கம் போல் தனது கச்சிதனமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தினார். இன்றும் இப்படம் எவர்கிரீன் படமாகும்.
12.கரீனா கபூர் நிராகரித்த ‘கல் ஹோ நோ ஹோ’
இந்த படத்தின் திரைக்கதை கரீனாவை மனதில் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் சில பண பிரச்சனைகளின் காரணமாக இவர் இப்படத்தை நிராகரித்தார். இதனால் இவருக்கு பதிலாக ப்ரீத்தி ஜிந்தா இப்படத்தில் நடித்தார். இப்படத்திற்க்காக இவர் பிலிம்பேர் விருது பெற்றார்.
13.ரித்திக் நிராகரித்த ‘ஸ்வதேஸ்’
ஒரு அற்புதமான கதாப்பாத்திரம் உள்ள படத்தை ரித்திக் நிராகரித்தார். இந்த கடினமான முடிவுகளின் காரணங்கள் அவர்களுக்கு தெரியும். இப்படத்தில் ஷாருக்கான் நன்றாக நடித்திருந்தார்.
14.சைப் அலி கான் நிராகரித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’
இப்போதும் பாலிவுட்டின் சிறந்த எவர்கிரீன் படமாக ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ பேசப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக சைப்பை அணுகியபோது இவர் இப்படத்தை நிராகரித்தார். ராஜ் கதாப்பாத்திரத்தில் மிக நன்றாக நடித்திருந்த ஷாருக்கான் அவரது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
15.கரீனா கபூர் நிராகரித்த ‘கோலியோன் கி ராசலீலா ராம் லீலா’
தனக்கு வரக்கூடிய ஒரு வாய்ப்பை நிராகரிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலின் காவிய படத்தை கரீனா கபூர் நிராகரித்தார். இப்படத்தில் தீபீகா படுகோனே நடித்தார்.