சென்னை:
தளபதியா? அவரா? அப்படி செய்யவே மாட்டாரே... கோலிவுட்டில் எல்லோரும் புருவம் உயர்த்தி ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தளபதி நடிகர் ஒரு படத்தில் புக் ஆகி விட்டால்... அது முடியும் வரை டூர் என்று புறப்படவே மாட்டார். படம் முடிந்த பிறகே எங்கு செல்வதானாலும் செல்வார். இது ஆரம்பத்தில் இருந்து அவர் கட்டி காத்து வரும் கண்ணியமான செயல். தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுக்காத நடிகர்.
ஆனால் என்ன ஆனதோ தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே யுஎஸ்சுக்கு பறந்து விட்டார். இவரது பயணம் திடீர் என்று நடந்ததால் படயூனிட் திணறித்தான் போய்விட்டது. அவரிடம் போய் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்கவா முடியும். இப்படி வழக்கத்திற்கு மாறாக தளபதி நடந்து கொண்டதற்கு காரணம்... என்று இதைதான் சொல்கிறார்கள்.
இயக்குனர் சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்து வருவதால் தயாரிப்பு தரப்பு "முகத்தை" கடுகடுப்பாக காட்டியிருக்கிறது. இதை கேள்விப்பட்ட தளபதி தன் அதிருப்தியை காட்டவே இப்படி சுற்றுலா புறப்பட்டு விட்டார் என்கின்றனர். உண்மையா... உண்மையா தளபதியே!