ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற முடிவுடன் இருக்கிறார் விஜய்சேதுபதி. ஒரு படம் ஹிட் கொடுத்ததும் அடியாட்கள், ரசிகர் மன்றங்கள் என அலப்பறையை கொடுப்பவர்களுக்கு மத்தியில் விஜய்சேதுபதியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் தன் குருநாதர் சீனு ராமசாமியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை மட்டும் பணிவுடன் ஏற்றுள்ளாராம். இதன் எதிரொலியாகவே 'தர்மதுரை' படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் 'மக்கள் செல்வன் விஜய்சேதுபதி' நடிக்கும் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளனவாம்.
அடுத்தடுத்து முன்னணி நடிகையருடன் ஜோடி சேருவதால் சக நடிகர்கள் விஜய்சேதுபதி மீது சற்று பொறாமையுடன் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.