பெண்களுக்கு பிடித்த மந்திரத்தின் பெயரைக் கொண்ட நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாக நடித்த மென்மையான இசை கொண்ட படம் ரிலீசானால் ஒரு ரவுண்ட் வரலாம் என்று திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.


பெற்றவர்களும் காத்திருந்தார்கள். இப்போது படமும் வெளிவருவதாக தெரியவில்லை. புதிய வாய்ப்புகளும் வரவில்லை. அதனால் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு செல்ல நடிகையும் முடிவு செய்துவிட்டார். 


படத்தில் உடன் நடித்திருக்கும் வெற்றிபதி நடிகர்தான் "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க படம் ரிலீசாகிடும் அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்"ன்னு சொல்லிக்கிட்டிருக்கிறாராம்.


Find out more: