மும்பை:
கல்யாணம் ஆனா என்னப்பா... நான் என்னைக்கு பெர்பாமன்ஸ் பெண் சிங்கம்தான்னு நிரூபிக்கிறேன்னு சபதமே போட்டு இருக்கார் பத்மபிரியா. எப்படி தெரியுங்களா.
தமிழ் சினிமாவில் பெர்பாமன்ஸ் கேரக்டர்ன்னா கூப்பிடுங்க பத்மபிரியாவை என்று இருந்த காலம் அவரோட கல்யாணத்துக்கு பிறகு மலையேறிவிட்டது. கல்யாணம் ஆயிடுச்சா... கலை துறை பக்கம் வராதீங்கன்னு சொல்லாம சொல்றாங்க...
கல்யாணத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த பத்மப்ரியாவை கோலிவுட் கண்டுக்கவே இல்ல. இதனால் தன் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பிய பத்மப்ரியா காத்திருந்த யோகம்... அள்ளி அணைத்துக் கொண்டது.
தி ஆர்பன் என்ற டத்தில் நஸ்ருதீன் ஷாவின் மகன் விவான் ஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் கமாலினி முகர்ஜி, மாளவிகா மேனன் ஆகியோர் இருந்தாலும் இவருக்குதான் லீட் ரோலாம். படத்தை இயக்கும் ரஞ்சித் பிலிட் 3 தேசிய விருதுகள் அள்ளியவர். அப்புறம் என்ன இனி பத்மப்ரியா பாலிவுட்டிலேயே செட்டில் ஆனாலும் ஆச்சரியம் படுவதற்கில்லை. எங்கு மதிப்பு இருக்கோ... அங்கேதானே இருக்க முடியும்.