சென்னை:
களவாணி நடிகைக்கு இப்போ கைவசம் படம் இல்ல. நம்மை வைச்சு செஞ்சுட்டாங்களேன்னு இருந்தவர் இப்ப நான் காட்டுறேன்யா படம்னு விதவிதமா எடுத்து தள்ளுறாராம். என்ன விஷயம்ன்னா?
களவாணி படத்துக்கு அப்புறம் அந்த நாயகிக்கு சொல்லிக்கிற மாதிரி பெரிய ஹிட் படங்கள் கிடைக்கலை. அப்புறமா சுந்தர இயக்குனர் படம் கொஞ்சம் கைகொடுத்தாலும் அம்மணியோட கால்ஷீட் டைரி ரொம்பவே இல்ல. என்னடா இது என்று நொந்து போனவருக்கு கடைசியாக கிடைச்சதும் பேய் வேடம்தான்.
நம்மளை வைச்சு பிலிம் காட்டாதவங்களுக்கு நான் காட்டுறேன் படம்னு தனது வலது கையில் புதிதாக ஜிப்சி பெண்ணின் உருவத்தை ஒரு டாட்டூவாக்கி இருக்கிறார். இதை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து டிவிட்டரில் போட்டு வருது பொண்ணு... நல்ல காட்டுறாங்க படத்தை.