சென்னை:
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி... என்பதுபோல ஆரம்பிக்க உதவியவர் இப்போது உபத்திரவம் செய்வதால் நொந்து போய் உள்ளாராம் இந்த இளம் இயக்குனர். இந்த மேட்டர்தான் பரபரவென்று கோடம்பாக்கம் முழுவதும் பரவுகிறது.


உலகமே எதிர்பார்க்கும் உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியீடு தாமதம் ஆவதற்கு அவர்தான் காரணம் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஒருவரைதான் கைக்காட்டுகிறது. இந்த படம் ஆரம்பிக்கவே அவர்தான் காரணமாக இருந்தார். இப்போது படம் வெளிவராமல் தடுப்பதும் அவரே! இப்படி இருந்தால் என்ன செய்வதாம் என்று கேட்கிறார் அந்த இளம் இயக்குனர்.


காரணம் என்னவென்றால்... இந்த படத்தின் நீளம் அதிகம் இருப்பதால் குறைக்க வேண்டும் என்று உச்சநட்சத்திரத்தின் இளைய மகள் இயக்குனரிடம் பிடிவாதம் பிடிக்கிறாராம். காட்சிகளை குறைக்க வாய்ப்பே இல்லை என்று இயக்குனர் திட்டவட்டமாக சொன்னதால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கிட்டே போகுதாம். என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... உதவியும் செய்துட்டு கடைசியில் உபத்திரமும் செய்யலாமா?


Find out more: