சென்னை:
ஆக்சனில் கலக்கணும் முடிவு செய்து களத்தில் குதிக்கிறார் கமல்ஹாசன். ஆமாங்க... இனி தொடர்ந்து படங்கள்தான் என்று செஞ்ச முடிவு... முடிவுதானாம். 


இப்போ  ‘சபாஷ் நாயுடு’  நகைச்சுவை படமாக எடுத்துக்கிட்டு இருக்காரு. இதுல மூத்த மகள் சுருதி ஹாசன் நடிக்க, இளைய மகள் அக்சராஹாசன் உதவி டைரக்டராக இருக்கார்.


இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் ஒரு அதிரடி சண்டை படத்தில் நடிக்க முடிவு செஞ்சு இருக்காராம். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் டைரக்டு செய்வார் என்று சொல்றாங்க. நகைச்சுவை, ஆக்சன், கேரக்டர் ரோல் என்று கலந்து கட்டி அடிக்க முடிவு செய்துட்டாராம் கமல்ஹாசன்.


இனி வருடத்திற்கு 3 படமாவது வெளிவரணும்னு முடிவு எடுத்தா எடுத்ததுதான் போலிருக்கு.



Find out more: