சென்னை:
வரும் 22ம் தேதி... வரும் 22ம் தேதி என்று கொஞ்சம் கொஞ்சமாக கன்பார்ம் ஆகி வருகிறது கபாலி. இதற்கிடையில் அமெரிக்காவில் 450 ஸ்கிரீனில் வெளியிடறாங்களாம்...
முதன்முதலாக ஒரு தமிழ்படத்திற்கு இத்தனை ஸ்கிரீன்கள் என்பதுதான் முதல் பெருமை. அது கபாலி படத்திற்கு என்பது அடுத்த பெருமை. ப்ரீமியர் காட்சி 21ம் தேதி என்பதால் 22ம் தேதி கண்டிப்பாக படம் ரிலீஸ் என்று தகவல்கள் பரபரக்கின்றன.
ஏங்கிக் கிடந்த ரசிகர்கள் இப்போ செம கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலாய் என 5 மொழிகளில் படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.
இன்று (திங்கட்கிழமை) 'கபாலி' சென்சாருக்கு போகுதாம். வரும் 21-ம் தேதி வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடக்குதாம். இப்பவே அத்தனை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்க.
இந்நிலையில் புதிய சாதனை ஒன்றையும் செய்திருக்கு 'கபாலி'. இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை 'சினி கேலக்ஸி' வாங்கி இருக்காம். 'கபாலி' படத்தை அமெரிக்காவில் திரையிடுவதற்காக மட்டும் 450 ஸ்கிரீன்களை ஒப்பந்தம் செஞ்சிருக்காங்க. இதுவரை எந்த இந்திய படமும் இந்தளவிற்கு ரிலீஸ் ஆகவில்லையாம். இப்ப அந்த சாதனையை "கபாலி" செஞ்சுருக்கு...