சென்னை:
வந்தோமா... சிரிக்க வைச்சோமா... ஜெயிச்சோமா என்று இப்ப இருக்க முடியாது. ரசிகர்கள் இப்ப ரொம்ப உஷாரு... கெட்டப்புல ஆரம்பிச்சு செட் வரைக்கும் டிபரெண்ட் காண்பிச்சா மட்டுமே பீல்டுல நிலைக்க முடியும். இது எல்லாருக்கும் பொருந்தும்...
அதான் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கிறார் தனுஷ். தொடரியில் ரயில் கேண்டீனில் வேலை செய்பவர், கொடியில் அரசியல்வாதியாக வேட்டி சட்டையில் நடிக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டாவில் செம ஸ்டைலிஸ்... இப்படி மாறி மாறி வித்தியாசம் காட்டும் தனுஷ்... வடசென்னை படத்துக்காக தாடி வளர்க்கிறாராம்.
இப்போ கௌதம் படம் முடியும் தருவாயில் இருப்பதால் அதை முடித்தவுடன் தாடி கெட்டப்புல வட சென்னைக்கு போறாராம்... போறாராம்... இந்த படத்தை ரொம்ப ரசிச்சு செய்ய போறாராம்.