2001-ம் ஆண்டு, வெளிவந்த 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவர் இசையமைப்பில் இதுவரை 47 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதைத் தொடர்ந்து, விக்ரமின் 'இருமுகன்' திரைப்படம் மற்றும் சூர்யாவின் 'எஸ்-3' உள்ளிட்ட  திரைப்படங்களுக்கு  இவர் இசையமைத்து வருகிறார். 


இந்நிலையில் இயக்குனர் விஜய், ஜெயம் ரவியை வைத்து இயக்கவுள்ள புது திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் இவர் இசையமைப்பில் உருவாகும் 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் ஏ.எல்.விஜய் இயக்கும் திரைப்படத்திற்கு பொதுவாக ஜிவி பிரகாஷ்  இசையமைப்பது தான் வழக்கம். ஆனால் முதன்முறையாக விஜய், ஹாரிஸ் ஜெயராஜை இந்த புது படத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find out more: