விஜய் சேதுபதி நடிப்பில் 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'தர்மதுரை' ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பதை நாம் அறிந்தோம். இதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில், அவர் பெயரிடப்படாத ஒரு புது படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதில் வில்லனாக ஆகாஷ் தீப் சைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அயன் திரைப்படத்தில், சூர்யாவிற்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் தீப் சைகள்
![](http://sim01.in.com/89e5d6eaa3ec90b95597e054fee39076_ls_t.jpg)
மேலும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று, பூஜையுடன் எளிய முறையில் தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதி, மடோன்னா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கலந்துக்க கொண்டுள்ளனர்.
மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.