வம்பு நடிகரின் படத்தை இயக்கி, அறிமுகமான சிவன் இயக்குனர். இந்த படத்திற்கு பிறகு ஒல்லி நடிகரின் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு ஒல்லி நடிகர் தயாரிக்க, இவர் நம்பர் நடிகையை வைத்து படம் ஒன்றை இயக்கினார்.
இந்த படத்தை இயக்கும் போது, இயக்குனரோடு நம்பர் நடிகைக்கு காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் படப்பிடிப்பு தளத்தில், ஒட்டி உறவாடுவதாக கிசுகிசுக்கள், ஒல்லி நடிகர் காதுக்கு எட்டியது. அதன் பிறகு இதை கண்டித்த ஒல்லி நடிகரை, நம்பர் நடிகை திட்டிவிட்டுட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ஒல்லி நடிகர் நம்பர் நடிகையோடு இப்போ பேசுவதே இல்லையாம். மேலும் சமீபத்தில் நடந்த ஒரு விருதுவிழாவில், நம்பர் நடிகை ஒல்லி நடிகரிடம் இதற்காக சாரி-யும் கேட்டாராம். ஆனால் அவர் மன்னிக்கவில்லையாம்.