சென்னை:
அவர் கேரக்டரே தனிங்க... அவரை புரிந்து கொள்ளவே முடியாது என்று பேஸ்புக்கில் புகழ்ந்து தள்ளப்பட்டு இருக்கு. யாரை பற்றி தெரியுங்களா?
அவர் இயக்குனர் பாலாதான். இப்படி அவரை புகழ்ந்தது ஜான் மகேந்திரன். தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்ற மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு சுமார் இருபது நாட்கள் தஞ்சாவூரில் எடுத்திருக்கிறார் பாலா.
தாரை தப்பட்டை

இதில் பெரியவர் ஒருவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல் அது. இந்த காட்சியை ஷீட் செய்யும் போது இறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறி படுத்தால், மீண்டும் மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார். அப்புறம் மீண்டும் மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார். இப்படியே 20 நாட்கள் வரை ஷீட்டிங் நடந்திருக்கு.
படப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும்போது டைரக்டர் பாலா அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு பெரிய கவரை கவரை கொடுத்து அனுப்பியுள்ளார்.
அவர் தன் இளமை வயதிலும் அவ்வளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார். இதுபற்றி கேட்டபோது “வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே" என்று பாலா சார் சொன்னார். இதுதான் பாலா சார். அவரை பற்றி யாரும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்று புகழாரம் சூட்டி உள்ளார். தற்போது இந்த பதிவுதான் கோலிவுட் வட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.