சென்னை:
கயல் படத்தில் நடித்த சந்திரனை ஞாபகம் இருக்கிறதா? திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சினிமா உலக வாழ்க்கையை கவனமாக எடுத்து வைத்து வருகிறார். அதுபோல்தான் தற்போது ஒரு படத்தை ஒத்துக் கொண்டுள்ளார்.


நாளைய இயக்குனர் தொடரில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்ற சுதர் என்ற புதுமுக இயக்குனர் சந்திரனை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன அவர் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டாராம். 


காரணம் இது 4 திருடர்களை பற்றிய ப்ளாக் ஹியூமர் கதை. ஏறத்தாழ சூதுகவ்வும் பாணியில் வேறு ஒரு புது விஷயத்தை சொல்லுதாம். இதில் மற்றொரு திருடனாக நம்ம பார்த்திபன் நடிக்கிறார். சந்திரனுக்கு ஜோடி பிச்சைக்காரன் பட ஹீரோயின் என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்ப படம் ஒரு கலக்கு கலக்கும் என்று சொல்லுங்க...


Find out more: