சென்னை:
வந்துட்டார் அவரும்  வந்துட்டார் என்று கோலிவுட் கூவி இருக்கு. எதற்கு என்று தெரியுங்களா?


வந்தது இவர்தான். ஒய்.ஜி. மகேந்திரன் மகளும், தியேட்டர் கலைஞருமான மதுவந்திதான். இவர் சீனு ராமசாமி இயக்கும் ’தர்மதுரை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இவரை நோக்கி ஒரு கேள்வி எழுந்தது. ஏன் இத்தனை வருஷமாக தமிழ்ப்படங்களில் பார்க்கமுடியலையேன்கிற கேள்விதான் அது. அதுக்கு என்ன பதில் சொல்லியிருக்கார் தெரியுங்களா? வித்தியாசமான நல்ல ரோல்களில் தாமதமாக அறிமுகமாவதில் எனக்கு சந்தோசமே.


முன்னாடியே அறிமுகம் ஆகியிருந்தால் மின்னி மறையும் கதாபாத்திரங்கள் சிலவற்றில் மட்டும் நடித்து முடித்து விட்டு இப்போது அம்மா அண்ணி கதாபாத்திரங்களுக்கு மாறி இருப்பேனோ என்னவோ?! இப்ப முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது சந்தோஷம் என்று சொல்லியிருக்கார்.


இந்த படம் மட்டுமின்றி ஆர்யா நடிக்கும் 'கடம்பன்' படத்திலும் மதுவந்திக்கு முக்கிய ரோலாம். 


Find out more: