ராதிகா அப்டே
பெங்காலி, தமிழ், மராத்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில், உணர்ச்சிமிக்க கதாப்பாத்திரங்களில் நடித்தவர் ராதிகா அப்டே. ஹண்டர் பாடலாப்பூர் திரைப்படத்தில், தனது நடிப்பை முழுமையாக காட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09230846/104_578136a49100c.jpeg)
பூமி பெட்னிகர்
கடந்த 2015-ம் ஆண்டு, டும் லக கே ஹேஷா திரைப்படத்தில், ஆயுஷ்மான் குரான்னாவிற்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமான பூமி பெட்னிகர் இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றுள்ளார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09230930/104_578136d0bf664-1024x604.jpeg)
மனு ரிஷி
ஒய் லக்கி லக்கி ஒய் திரைப்படத்தில் நடித்து பிரபலமான மனு ரிஷி, இந்த படத்தில் இவரது நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது... மேலும் இவர் நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துக்கள்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231012/104_578136f4be087.jpeg)
தாஹிர் ராஜ் பாஸின்
மதுரானி திரைப்படத்தில், ராணி முகர்ஜிக்கு வில்லனாக நடித்த தாஹிர் ராஜ் பாஸின் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவரது வில்லத்தன நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231042/104_5781371845e42.jpeg)
சர்வீன் சாவ்லா
ஹாட் ஸ்டோரி 2 திரைப்படத்தில் நடித்து, பிரபலமான சர்வீன் சாவ்லா... தனது முழுநடிப்பு திறமையையும் இந்த படத்தில் காண்பித்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231147/104_5781375867a86-1024x433.jpeg)
ஆனந்த் திவாரி
தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விளம்பரத்தில் நடித்து பிரபலமான ஆனந்த் திவாரி. இந்த விளம்பரத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் பெற்றார். இவரது நடிப்பு கோ கோவா கோன் திரைப்படத்தில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231248/104_5781379689e7d.jpeg)
மனிஷ் சவுதிரி
சொச்ச நா தா மற்றும் ராக்கட் சிங் திரைப்படத்தில் நடித்து பிரபலமான மனிஷ் சவுதிரி தற்போது அப்பா ரோலில் நடித்து வருகிறார். இவரது திறமை மேலும் வெளியே தெரிய வாழ்த்துக்கள்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231332/104_578137c22fa8d.jpeg)
அபிமன்யு சிங்
குலால் திரைப்படம் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த அபிமன்யு சிங் ஆகும். இந்த படத்திற்கு பிறகு பிஸியான நடிகராக அபிமன்யு திகழ்ந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231412/104_578137ea18f88.jpeg)
நவீன் கௌஷிக்
'ராக்கட் சிங்' திரைப்படத்தில் முதன்மை விற்பனையாளராக நடித்த நவீன் கௌஷிக் திறமை மிக்க நடிகராவார். ஆனால் இந்த படத்திற்கு பின், இவருக்கு சரியான படவாய்ப்புகள் வரவில்லை. வருங்காலத்தில் இவர் திரைப்பட வாய்ப்புகள் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231448/104_5781380d7d182.jpeg)
குல்ஷான் தேவைய்யா
கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து, தனக்கு அடையாளம் கொடுக்கும் வண்ணம் நடிப்பவர் குல்ஷான் தேவைய்யா. இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிகின்றன.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/07/09231535/104_5781383d463c8.jpeg)