பாலிவுட் சினிமாவில் கசமுசா நடப்பது சகஜம் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். சில திரைப்படங்களில், நம்பத்தகாத சில உண்மை சம்பவங்கள் நடந்துள்ளது. அவற்றை உங்கள் பார்வைக்காக இதோ..
1.ஷோலாய் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தர்மேந்திரா லைட் மேன்களுக்கு அதிக பணம் கொடுத்துள்ளாராம்.எதற்காக என்றால், படப்பிடிப்பில் அடிக்கடி எதிர்ப்பார்க்காத சமயத்தில் லைட்களை அணைத்தால், ஹேமா மாலினியை கட்டி பிடிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவாம்.
2.டிடிஎல்ஜி திரைப்படத்திற்கான சிறந்த நடிகர் விருதை ஷாருக்கான் வென்றதிற்கு பிறகு, அமீர்கான் திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு வருவதை தவிர்த்து வந்தார். ஏனென்றால், ரங்கீலா திரைப்பட சிறந்த நடிகர் விருது, ஷாருக்கான் வென்றதால் அவருக்கு கிடைக்க தவறியதாம். இதனால் அவர் திரைப்பட விருது நிகழ்ச்சி விழாவை, அன்றிலிருந்து இன்றுவரை தவிர்த்து வருகிறாராம்.
3. டிடிஎல்ஜி திரைப்படத்தில், ஷாருக்கான் அணிந்திருந்த கருப்பு ஜாக்கட், உதய் சோப்ரா அவருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த போது, பரிசாக அளித்ததாம்.
4. பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷய் கண்ணா கலந்துக் கொண்டு போது அவர், தனக்கு ஜெயலலிதாவை டேட்டிங் செய்ய ஆசை உண்டு. அவருடன் நிறைய கபடச் செயல்களில் ஈடுபட்டுள்ளேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
5. அமீர் கான், காபி க்ஹுஷி காபி கும் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தாராம். ஆனால் இந்த படம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். படம் முடிவதற்குள், நான் திரையரங்கில் இருந்து வெளியேறினேன் என்பதை அவர் வெளிப்படையாக ஒரு தடவை தெரிவித்தார்.
6. ஆர்னால்டு சுவார்செனேகர் நடித்த 'பாக் மில்கா பாக்' திரைப்படத்தில், தீவரவாதியாகவும், மில்கா சிங்கின் தந்தையாக நடித்ததும் சலீம் அபு அஸீஸ் தான் .
7.ஹாரி பாட்டர் திரைப்படத்தின் தொடர்ச்சி முடிவு பெறும் போது, டானியல் ரெட்ச்லிஃ 160 ஜோடி கண்ணாடிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், நடைபெற்ற ஒரு ஆடிஷனில் ஸ்மிதா பட்டேல் வெளியேற்ற பட்டார். இதனால் அவர் அழுது கொண்டு, தூர்தர்ஷனின் இயக்குனர் யாகூப் சயீதை சந்தித்து ரீ ஆடிஷனில் கலந்துக் கொள்ள அனுமதி பெற்றார்.
9. ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்தில், ஜமால் சேற்றில் உருண்டு பொறந்தது போல் காட்சியளிப்பார் ஆனால் உண்மையில் அது சேறு இல்லை... பீனட் பட்டரும் சாக்லேட்டுமாம்...