சென்னை:
தளபதி கொண்டாடுவாரா? கொண்டாடணும்... என்று அவரது ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா? இது அவர்களின் வெகு நாட்கள்... இல்ல...ஆண்டுகள் ஆசையாம்!


அந்த ஆசை இதுதான். தளபதி நடித்த துப்பாக்கி, கத்தி படங்கள் செம ஹிட். ஏன் தெறி படம் மெகா ஹிட். இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்துள்ள தங்கள் தளபதி வெள்ளி விழா கொண்டாடுவதே இல்லை.


சமீபத்திய தெறி படத்தின் வெற்றிக்காவது அவர் வெள்ளிவிழா வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். தாணுவும் கபாலி ரிலிஸிற்கு பிறகு இதற்கான ஏற்பாடுகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் இந்த பேராவலை தளபதியும், தயாரிப்பாளரும் நிறைவேற்றுவார்களா?



Find out more: