சென்னை:
"தல"க்கு வில்லனாக நடிக்க  இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதால் அவர் என்ன சொல்வார் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.


"தல" தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதற்காக பலரிடம் பேசியும் படக்குழுவிற்கு திருப்தி இல்லையாம்.


இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு சாக்லேட் பாயாக அறிமுகமான பிரசன்னாவிடம் பேசி வருகின்றனராம். ஏற்கனே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் பிரசன்னா. 


அதனால் "தல"க்கூட பைட் பண்ண ரெடியான்னு படக்குழுவினர் பேசி வருகின்றனராம். என்ன சொல்வார் பிரசன்னா என்பதுதான்த தற்போதைய கோலிவுட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது. மற்றொரு வில்லனாக அரவிந்த்சுவாமியிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அப்போ "தல"க்கு எத்தனை வில்லன்ங்க...?


Find out more: