சென்னை:
எனக்கு வயசாகிடுச்சு... இனிமே அப்படி முடியாது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் இசைப்புயல்.


ஆமாங்க.. பிரபல பாலிவுட் இயக்குனரான அஷீதோஷ் கோவரிக்கர் ‘மொகஞ்ச தாரோ’ படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா மும்பையில் நடந்துச்சு. இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒரு கேள்வியை கேட்டார் அஷீதோஷ் கோவரிக்கர். அதற்குதான் அப்படி பதில் சொன்னார் இசைப்புயல். என்ன கேள்வின்னா?

அஷீதோஷ் கோவரிக்கர்


‘தென்னிந்திய மொழிப் படங்கள், இந்திப் படங்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்களுக்கான படங்கள் என அந்தந்த கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு எப்படி உங்களால் தனித்தன்மையுடன் இசை அமைக்க முடிகிறது’ என்றாரே பார்க்கலாம். இதற்கு மென்புன்னகையுடன் இசைப்புயல் என்ன சொன்னார் தெரியுங்களா?


‘காதல், சோகம், கோபம், கனவு போன்ற எல்லா நிகழ்வுகளிலும் நம் அனைவருக்கும் ஒரேமாதிரியான உணர்வுதான் ஏற்படும். உலகளாவிய அளவில் இந்த உணர்வுகளின் கோர்வையை நான் கிரகித்துக் கொண்டு எனது இசையில் சேர்த்து தருவேன். ஆனால் இப்போ எனக்கு வயசாகிடுச்சு... இனிமேல் அப்படி செய்ய முடியாது என்றாரே பார்க்கலாம். உண்மையை ஒத்துக்கவும் பெரிய மனசு வேண்டும். அது இசைப்புயலிடம் இருக்குங்க.



Find out more: