சென்னை:
சதுரங்க வேட்டைக்கு பிறகு ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜீக்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும் இந்த நேரத்தில் இவர் இப்படி செய்யறாராம்.


என்ன செய்கிறார் என்று கேட்கிறீர்களா? நட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் நட்ராஜ் தற்போது உலக அழகி ஒருவருடன் சேர்ந்து ஹைடெக் கார் திருடும் வேலையை செய்யறாராம்... செய்யறாராம். என்னங்க இப்படி செய்யறார்ன்னு கேட்குறீங்களா? 


அட விஷயம் என்னன்னா? தற்போது ‘போங்கு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 


இந்த படத்தில் நட்டி ஹைடெக் கார் திருடுபவராக நடிக்கிறார். அதுதான் மேட்டரு. வேற ஒன்றும் இல்லீங்க. படப்பிடிப்பை சென்னை, அகமதாபாத், மதுரை ஆகிய இடங்களில் நடத்தியுள்ளனர்.


Find out more: