2013-ம் ஆண்டு, ஹாலிவுட்டில் வெளிவந்த 'ஏ காமன் மேன்' திரைப்படம்,   2008-ம் ஆண்டு ஹிந்தியில் அனுப்பம் கீர் நடித்த 'ஏ வெட்னெஸ்டே' திரைப்படத்தை காபி அடித்து எடுக்கப்பட்டதாகும். 


1.பாலிவுட்டில் 2012-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி, பெற்ற 'விக்கி டோனார்' திரைப்படத்தின் கதையை காப்பி அடித்தார் போல், இங்கிலீஷில் 'டெலிவரி மேன்' என்ற திரைப்படத்தை உருவாக்கினார்கள். இந்த இருபடங்களிலுமே ஒரே கருத்து தான் இடம்பெற்றிருக்கும்.


2.1993-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்த 'டார்' திரைப்படத்தில், அவர் தனது நெஞ்சில் ஹீரோயினின் பெயரை பச்சை குத்துவார். இதை ஆங்கிலத்தில் 1996-ம் ஆண்டு வெளிவந்த 'பியர்' திரைப்படத்தில், ஜேம்ஸ் பாண்ட் பின்பற்றியிருப்பார். 


3.அமீர் கான், ஜாக்கி ஷெராப் நடித்த 'ரங்கீலா' திரைப்படத்தின் கதையை பின்பற்றும் வகையில், 'வின் ஏ டேட் வித் டாத் ஹேமில்டன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவானது. இந்த படத்திலும் இரண்டு நாயகர்கள் ஹீரோயினை காதலிப்பார்கள்.


4.2001-ம் ஆண்டு ஹிந்தியில் கமல் நடிப்பில் வெளிவந்த 'அபேய்' திரைப்படத்தை போல, ஹாலிவுட்டில் கில் பில் வால்யூம் திரைப்படம் உருவானது. 'அபேய்' திரைப்படம் 'ஆளவந்தான்' திரைப்படத்தின் ஹிந்தி ஆக்கமாகும். 


5.இரண்டு நண்பர்களும் ஒரு பெண்ணையும் மையப்படுத்தி உருவான 'சங்கம்' ரொமான்டிக் திரைப்படத்தை போல, 'பேர்ல் ஹார்பர்' ஆங்கில திரைப்படம் 2001-ம் ஆண்டு வெளிவந்தது.


6.அதிகம் பேசும் பெண்ணாக 'ஜாப் வி மெட்' திரைப்படத்தில் கரீனா கபூர் நடித்திருப்பார். இந்த படத்தின் கதையை போல ஆங்கிலத்தில், 'லீப் இயர்'  திரைப்படம் உருவானது. இதிலும் ஹீரோயின் அதிகம் பேசுபவராக நடித்திருப்பார்.




Find out more: