'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ''ஆண்டவன் கட்டளை'' திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தை 'காக்கா முட்டை' திரைப்பட இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக 'இறுதி சுற்று' ரித்திகா சிங் நடிக்கிறார்.
இறுதிக்கட்ட நிலையில் உள்ள இதன் படப்பிடிப்பில் தற்போது இன்னொரு நடிகை இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை... விஜய் சேதுபதியின் 'இறைவி' திரைப்படத்தில், மலர்விழி கேரக்டரில் நடித்த பூஜா தேவரய்யா தான்.
பூஜா தேவரய்யா

இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். மேலும் நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர், வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே இசையமைத்து வருகிறார்.