சென்னை:
மாவீரன் கிட்டு... மாவீரன் கிட்டு என்று வர்றார் விஷ்ணு விஷால். என்னங்க புரியலையா.
விஷ்ணுவிஷால், பநீதிவ்யா ஜோடியாக நடிக்க சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திற்குதான் மாவீரன் கிட்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிடுகிடுவென தொடங்கி நடக்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு அசத்தி உள்ளனர்.
சுசீந்திரன் இயக்கம் என்றால் ஆரம்பிப்பதும் தெரியாது முடிப்பதும் தெரியாது என்பதுபோல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்கும் என்கின்றனர் கோலிவுட் கோபாலுக்கள். ஆனால் தலைப்பை வைச்சு படம் எதை சொல்ல வருது கண்டுபிடிக்க முடியலையே!
இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.