சென்னை:
எந்த விஷயம் செய்தாலும் அதில் புதுமை புகுத்துவது பார்த்திபன் ஸ்டைல். புதுமை என்றாலே பார்த்திபன் என்று சொல்லிவிடலாம். 


புதுமைக்கு பஞ்சமும் இருக்காது. அதை அவர் கிரியேட் செய்துள்ள விதமும் புதுமையாகவே இருக்கும். இப்படி அவர் தன் படங்களில் மட்டுமின்றி பல வகையிலும் புதுமையாக செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதெல்லாம் படத்தின் தலைப்பிலேயே புதுமையை தொடங்கிவிட்டார்.


இவர் இயக்கத்தில் வந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று தலைப்பு வைத்து ரசிக்க வைத்தார். படமும் ரசிக்க வைத்தது என்பது உண்மையிலும் உண்மை. இப்போது மீண்டும் தன் அடுத்த படத்திற்கான ஒரு க்ளூவை டுவிட்டரில் பதிவேற்றி உள்ளார். அது எப்படி இருக்கு தெரியுங்களா? 


கோ..ட்.. இ..ங்..ளை நி..ப்..க இப்படி கொடுத்து இருக்கார். படத்தோட தலைப்பு என்ன தெரியுங்களா... கோடிட்ட இடங்களை நிரப்புக... ரூம் போட்டு யோசிப்பாரா? இல்ல பங்களா போட்டு யோசிப்பாரோ தெரியலையே...


Find out more: