சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம், அண்மையில் வெளிவந்து, தற்போது ரசிகர்களிடம்அமோக வரவேற்புகளை பெற்று வருகின்றது. 


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகியுள்ளார். அவர் இயக்கவுள்ள புது திரைப்படத்தில், பிரபல நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த படத்தில் இவர் குத்துசண்டையாளராக நடிக்கவுள்ளார். இதனால் சூர்யா தற்போது அதிக உடல் எடையை ஏற்றி, குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகின்றன. 



Find out more: