'கணிதன்' திரைப்படத்திற்கு பிறகு அதர்வா நடித்து வருவது 'செம போதை ஆகாத' திரைப்படம். முதன்முறையாக இந்த படத்தை அவரே தனது 'கிகாஸ் என்டேர்டைன்மெண்ட்' சார்பில் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன், பல திரைப்படங்களில் சிறப்பாக, பாடல்களை பாடியுள்ளார் என்பதை நாம் அறிந்தோம்.
அவர் தற்போது 'செம போதை ஆகாத' திரைப்படத்தில் உள்ள ஒரு முக்கிய பாடலை பாடியுள்ளார். முதன்முறையாக யுவன் இசையமைப்பில், ரம்யா பாடிய இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தை 'பானா காத்தாடி' திரைப்பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். மிஷ்டி மற்றும் அனைகா சொட்டி இருவரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.