சென்னை:
அமெரிக்காவில் ஓய்வில் இருந்த ரஜினி சென்னை திரும்பியது தெரிந்த விஷயம். ஆனால் அவர் வந்தவுடன் செய்ததுதான் முக்கிய விஷயம். என்ன தெரியுங்களா?
கபாலி படம் டப்பிங்கை முடித்த ரஜினி தன் மகளுடன் அமெரிக்காவிற்கு பறந்தார். பின்னர் பல வதந்திகள். தொடர்ந்து கபாலி படம் ரிலீஸ். வசூலில் பட்டையை கிளப்பினாலும் பல்வேறு வகையான விமர்சனங்கள். இந்நிலையில்தான் ரஜினி சென்னைக்கு திரும்பினார்.
வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை என்ன தெரியுங்களா? காலில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலை சந்திக்க உள்ளாராம்.