மும்பை:
என்னப்பா... இப்படி செய்துட்டீங்களேப்பா... என்று வருத்தத்தில் உள்ளனர் பச்சன் குடும்பத்தினர். என்ன காரணம் தெரியுங்களா?


பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் ஓய்விற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஓய்வு முடிந்து மும்பைக்கு திரும்பினார். எப்போதும் போல் அவரை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகப்படியாகவே இருந்தது.. 


ஊடகங்களும் அவரைப் புகைப்படம் எடுக்க துரத்த பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாவையும், அவரது மகள் மற்றும் தாயையும் பத்திரமாக கார் அருகே அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இதற்கிடையில் நெருக்கி தள்ளிய ரசிகர்களையும், போட்டோகிராபர்களையும் பாதுகாவலர்கள் தள்ளி விட அதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தா ராய் மீது விழுந்தார்.


இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் வலியால் கதறினார். மகள் ஆரத்யாவை காரின் பின்சீட்டில் அமர வைத்த ஐஸ்வர்யா ராய் இதனால் கவனம் சிதறி அவசரத்தில் கார் கதவை வேகமாக சாத்தினார். இதில் குழந்தைக்கு தலையில் அடிப்பட குழந்தையும் வீறிட்டது. இப்படி ஒரே நேரத்தில் தாயும், குழந்தையும் காயம்பட்டதால் ஐஸ்வர்யா ராய் டென்ஷன் ஆகிவிட்டார்.


குழந்தையின் சமாதானப்படுத்திக் கொண்டே பின்னால் திரும்பி ‘என் அம்மாவைத் தள்ளி விட்டது யார்?' என கோபத்தில் கத்த இதனால் அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகினர்.  பின்னர் ஐஸ்வர்யா ராய் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


இந்த விஷயம் கேள்விப்பட்ட அமிதாப் குடும்பத்தினர் ரசிகர்களை மீது வருத்தமடைந்துள்ளனர் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


Find out more: