விஜய் நடித்த 'ஜில்லா' திரைப்படத்தில், விஜய்க்கு வளர்ப்பு தந்தையாக நடித்தவர் மலையாள நடிகர் மோகன்லால். இந்த படத்தை அடுத்து, இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விஜய் தற்போது நடித்துவரும் 'விஜய் 60' திரைப்படத்தின் கேரள திரையரங்கு ரிலீஸ் உரிமைகளை மோகன்லால் பெறவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகளை அவர் தற்போது தயாரிப்பாளர்களிடம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மோகன்லாலுக்கு சொந்தமான 'ஆசிர்வாத் மேக்ஸ்லாப் நிறுவனத்தின்' மூலம், விஜய்யின் 60-வதாவது திரைப்படத்தை, அவர் கேரளாவில் வெளியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின், கேரள ரிலீஸ் உரிமைகளை மோகன் லால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.