சென்னை:
நன்றி... நன்றி என்று "மகிழ்ச்சி" சொன்னவர் சொல்லியிருக்கிறார். யார் என்று நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வேறு யார்... சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான். எதற்காக தெரியுங்களா?
இது குறித்து அவர் தெரிவிதுள்ளதாவது:
“கபாலி திரைப்படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததால் உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வெடுத்தேன். இப்போது ஆரோக்கியமாக சென்னை திரும்பியுள்ளேன்.
கபாலி ஒரு புரட்சிகரமான படம். கபாலி வெற்றியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை, இங்கு நேரில் பார்த்து உணர்ந்தேன். இந்த படத்தை வெற்றி பெறச்செய்த ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தை தயாரித்த தாணு, இயக்கி ரஞ்சித் மற்றும் கபாலி படக்குழுவினருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தனது அரசியல் ஆலோசகரும், நண்பருமான சோவுடன் சேர்ந்த கபாலி படத்தை ரஜினி பார்த்துள்ளார். அப்போது படம் பற்றி சுருக்கமாக சோ கூறுகையில், மகிழ்ச்சி... வித்தியாசமான ரஜினியை பார்த்தோம் என்று தெரிவித்தாராம்.