தமிழசினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தனுஷ். 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இதுவரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவர் நடிப்பில் அடுத்து 'தொடரி', 'கொடி',  'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், தனுஷ் இன்று தனது 33-வது வயது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் தனுஷ் அவர்கள், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ, தமிழ் ஹெரால்டு சார்பில் வாழ்த்துக்கள்.


Find out more: