நடிகர் தனுஷ் பிசியாக 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதில் அமலா பால் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
வடசென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பு பிசியிலும், தனுஷ் ஒரு 12-வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அது என்னவென்றால்,
கோடீஸ்வரி என்ற 12 வயது சிறுமி, ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இவர் தற்போது வாழக்கையின் இறுதி கட்டத்தில் உள்ளார். இந்த சிறுமி தனுஷின் தீவர ரசிகை. எப்படியாவது தனுஷை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவருடைய கனவு.
இதை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த தனுஷ், கோடீஸ்வரி இருக்கும் மருத்துவமனைக்கு சென்று, அவரை நேரில் சந்தித்து, தனது பிஸியான நேரத்திலும், அவரது குடும்பத்தினரோடு நேரம் செலவழித்து, சிறுமியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
![](https://pbs.twimg.com/media/CoW-LFUUAAA06as.jpg)
![](https://pbs.twimg.com/media/CoXiMKOUIAAgnFJ.jpg)
தனுஷின் இந்த செயலுக்கு தற்போது அனைவரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.