சினிமா நடிகர்கள் அனைவரும், திரைத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை, வேறு தொழில்களில் போட்டு, இன்னும் அதிகமாக லாபம் சம்பாதிப்பர். அந்த வகையில், சில பாலிவுட் நடிகர்கள் சொந்தமாக பப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை, நாம் இன்றைக்கு விரிவாக பார்க்கலாம்...
1. சுனில் ஷெட்டி
இவர் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கிய பின்பு, பணங்களை நிறைய உணவகங்கள் முதலீடு செய்து, நடத்தி வருகிறார். வெளிநாட்டில் இவருக்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. அதில் இவர் நிறைய லாபம் சம்பாதித்து வருகிறார். மேலும் மும்பையிலும் இவருக்கு 'லிட்டில் இத்தாலி ரெஸ்டாரண்ட்' ஒன்று உள்ளது.
2. பாபி டியோல்
இவர் தான் சம்பாதிக்கும் பணத்தை, லாபம் தரும் தொழிலாளில் முதலீடு செய்வார். மும்பையில் சில பப்ஸ் மற்றும் உணவகங்களை நடத்தி வருகிறார். இவர் பெயரில் சுகானா மற்றும் சீயோன் என இரு உணவகங்கள் மும்பையில் உள்ளன.
3. சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹாலிவுட்டை சேர்ந்த 'பிளானட் ஹாலிவுட்' என்ற உணவகத்தை விலைக்கு வாங்கினார். இந்த உணவகத்தில் அவருடன் அக்ஷய் குமார் மற்றும் கரீனா கபூர் பார்ட்னராகஇருந்தனர். அதன் பிறகு இந்த உணவகம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.
4. ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி, 'வி8 கார்மட் குரூப்ஸ்' என்ற கம்பெனியை விலைக்கு வாங்கினார். இந்த கம்பெனி, பல மல்டி நேஷனல் ரெஸ்டாரண்ட்களை நடத்தி வருகிறது. மேலும் இவர் மும்பையில், சில நைட் க்ளப் பப்களையும் நடத்தி வருகிறார்.
5. அர்ஜுன் ராம்பால்
பாலிவுட்டில் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இவர் டெல்லியில், சில உணவகங்கள் நடத்தி வருகிறார். சாணக்யபுரியில் அமைந்திருக்கும் ஹோட்டல் சாம்ராத் மிகவும் பிரபலமானது அதற்கு சொந்தங்காரர் இவர்தான்.