பாலிவுட் சினிமாவில் இந்த ஜோடிகள் சேர்ந்து நடித்தால் நல்லா இருக்கும் என்று நாம் நினைப்போம். அதே போல் சில திரைப்படங்களில், பாலிவுட் ஜோடிகள் சிலரின் கெமிஸ்ட்ரி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த ஜோடிகள் யார் யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
அமீர் கான் - கங்கனா ராணத்

இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, திரைப்படங்களில் நடித்தால், மிகவும் அருமையாக இருக்கும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹித் கபூர் - பரினீதி சோப்ரா

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை நடித்ததில்லை. ஆனால் மக்கள் இவர்கள் இருவரும், சேர்ந்து ஒரு திரைப்படமாவது நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஷாருக்கான் - அலியா பாட்

இவர்கள் இருவரும் இணைந்து, கவுரி ஷிண்டே இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். திரையில் இவர்களது கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சல்மான் கான் - மாதுரி தீக்ஷித்

சல்மான் கானும், மாதுரி தீக்ஷித்தும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் சல்மான் கான் இன்னும் ஹீரோவாக்கவே நடித்து வருகிறார். மாதுரி தீக்ஷித் தற்போது திரைப்படங்களில் ஹீரோயின் ரோலில் நடிப்பதில்லை. அதனால் இது சாத்யமாவது கடினம் தான்...
பர்ஹான் அக்தர் - அனுஷ்கா ஷர்மா

தில் தடக்னே டூ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். இந்த ஜோடியை வேறு திரைப்படங்களில் பார்க்க ரசிகர்கள் தற்போது ஆவலாக உள்ளனர்.
ரன்வீர் சிங்க் - கரீனா கபூர் கான்

காம காட்சிகளில் நடிக்க, இவர்கள் தான் பெஸ்ட் பேர். இந்த ஜோடிகள் காமெடி, காதல், செண்டிமெண்ட் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிப்பார்கள்.
சுஷாந்த் சிங்க் ராஜ்புட் - ப்ரியங்கா சோப்ரா

இவர்கள் இருவரும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையை கொண்ட திரைப்படத்தில் நடித்தால் நல்ல இருக்கும். இருவரது கெமிஸ்ட்ரியம் ஒன்னு சேர்ந்தால் நல்லா இருக்கும்.
வருண் தவான் - தீபிகா படுகோன்

இவர்கள் இருவரும் மசாலா திரைப்படங்களில் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும். ரொமான்ஸ் மற்றும் எமோஷனலான காட்சிகளில் தீபிகா வருண் இணைந்து நடித்தால் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும்.