சென்னை:
தெரியாத ஆற்றில் காலை விட்டு இப்போ... கரை ஒதுங்கி கிடக்கும் வைகைபுயல் கிடைத்த பெரிய வாய்ப்பை இழந்து விடுவாரா என்று கவலைப்பட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள். காரணம் என்ன தெரியுங்களா?
அரசியல் பக்கம் போனதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியோ... அல்லது ஒதுக்கப்பட்டோ வனவாசம் போய் சேர்ந்தார் வைகை புயல். திரும்பி பார்ப்பதற்குள் ஏகப்பட்ட காமெடியன்கள் இவரது இடத்தை பிடிக்க போட்டி போடுகின்றனர். இதில் வாசனையான காமெடியன் ஹீரோவாக ஆகிவிட்டார்.
இருந்தாலும் மீண்டும் காலடி எடுத்து வைச்சு காமெடி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக போணியாகவில்லை. இதனால் திரும்ப காமெடி பாதைக்கே திரும்பி விட்டார். இந்நிலையில்தான் வைகை புயலுக்கு சரியான ஒரு ஆபர் வந்தது. பிரம்மாண்ட இயக்குநர் தயாரிக்க, பேண்டஸி இயக்குனர் இயக்கி பெரிய வெற்றி அடைந்த அரச படத்தின் 2ம் பாகம் எடுக்கத் திட்டமிட்டனர்.
ஸ்க்ரிப்டும் ரெடி, பிரம்மாண்டமும் ஓகே பண்ண புயலோ பண விஷயத்தில் கெடுபிடி காட்ட தூக்கி பரணில் போடுங்க... அவரே தேடி வருவார் என்று பிரம்மாண்டம் பேண்டஸி இயக்குனரிடம் சொல்ல இப்போ தவித்து வருகிறார் வைகை.
அலுவலகத்திலேயே உட்கார்ந்து விட்டத்தை வெறிக்கிறாராம். ஹிட்டு கொடுத்தாதான் பிழைக்கமுடியும்... நல்ல முடிவா எடுங்க கைப்புள்ள!