சென்னை:
கபாலி ஒரு பக்கம் கலக்கு கலக்கு என்று கலக்க.. மறுபக்கம் ஒருவருக்கு செம பாராட்டுக்கள் கிடைச்சிருக்கு. யாருக்கு தெரியுங்களா?


ரஜினி நடித்த கபாலி படம் உலகமெங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறது என்பது பழைய விஷயம். பல சாதனைகளை நொறுக்கி எடுத்து வருகிறது என்பது புதிய விஷயம். அதில் இதுவும் ஒரு புதிய விஷயம்.


இந்த படத்தோட பாடல்கள் ரசிகர்களிடையே செம ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் பாடல் எழுதிய அருண் ராஜாவிற்கு ஒரு பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இவருக்கு  இளையதளபதி விஜய், போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளாராம். இதை அருண் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.


நெருப்புடா... மகிழ்ச்சிடா...


Find out more: