சென்னை:
ரஜினி ரசிகர்கள் இவர் மீது செம கடுப்பில் உள்ளனர் என்ற தகவல்கள்தான் கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காரணம் ரஜினி ரசிகர்கள் பற்றி எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
படையப்பா படத்தில் ரஜினியை நிற்க வைத்து தான் மட்டும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ரம்யா கிருஷ்ணன் உட்காரும் காட்சியை காண பிடிக்காமல் கும்பகோணத்தில் திரையரங்கிலேயே செருப்பால் திரையை அடித்த ரசிகர்கள். ரஜினி மீது அவர்களுக்கு உள்ள பாசம் அப்படி. பாபா தோல்வி உள்ளதை உள்ளபடி ஏற்றவர்கள்.
கோச்சடையான், லிங்கா படத்தையும் அவர்கள் மனப்பூர்வமாக தோல்வி படம் என்றே ஏற்றுக் கொண்டனர். ஆனால் ரஜினியின் மாறுப்பட்ட நடிப்பில் வெளிவந்துள்ள கபாலி படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து தமிழர்களுக்கு பெருமையை பெற்றுத்தருகிறது. இந்நிலையில் இந்த படம் தோல்விப்படம் என்று கூறிவிட்டு பின்னர் சப்பைக்கட்டு கட்டி மறுப்பு அறிக்கை விட்ட கவிஞர் வைரமுத்து மீதுதான் ரசிகர்களின் முழு கோபமும் திரும்பி உள்ளதாம்.
இதற்கு தயாரிப்பாளர் தாணு தக்க பதிலடி கொடுத்து விட்டார். பாடல் எழுத வாய்ப்பு தராததால் இப்படி பேசுகிறார் வைரமுத்து என்று சொல்லிவிட்டார். இப்போது ரசிகர்கள் வைரமுத்தை... வயிற்றெரிச்சல் முத்து என்று கூறி மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். தேவையா இது வைரமுத்துவிற்கு என்று கோலிவுட்டும் திட்டுகிறதாம்.