சென்னை:
ஒரே படம் இருவரும் பாடி அசத்தி உள்ளனராம். ஒருவருக்காக... யார் அந்த இருவர்? யார் அந்த ஒருவர்?
விஷயம் இதுதான். அந்த இருவர் சிம்பு-தனுஷ். அந்த ஒருவர் இருவருக்கும் நண்பரான இசையமைப்பாளர் தமன் தான். சிம்புவும், தனுசும் நண்பர்கள் தான். ஆனால் இவர்களின் படத்தின் வியாபாரம் தனித்தனியாக பிரித்து இருவருக்கும் சண்டை போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படியேதான் ரசிகர்களும் இருக்காங்க.
இவர்கள் இருவருமே ஒரு தெலுங்கு படத்தில் தனித்தனியாக ஒரு பாடலை பாடியுள்ளனர், இந்த படத்திற்கு இசை தமன். காரணமும் இவர்தான். இருவருக்கும் இவர் நெருங்கிய நண்பர்.
ஒரே படத்தில் சிம்பு-தனுஷ் இருவரும் இணைந்து பாடுவது இதுவே முதன் முறை. இது ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே ஒரு தமிழ் படத்திலேயேயும் சேர்ந்து பாடுங்கப்பா...!