சென்னை:
"தல"க்காக தன் சொந்த பட தயாரிப்பை தள்ளி வைத்துள்ளாராம் நடிப்பு திலகத்தின் பேரன். என்ன விஷயம்ன்னா?


அஜித் எப்போதும் பிரபு குடும்பத்துடன் நல்ல நட்பில் இருப்பவர். இதை தற்போது விக்ரம் பிரபும் பாலோ செய்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


விக்ரம்பிரபு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக "முடிசூடா மன்னன்" என்ற படத்தில் நடித்து வருகிறார், இதற்கிடையில் தானே சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நெருப்புடா என்று தலைப்பு வைத்த படத்தில் நடித்து வருகிறார். இங்குதான் இருக்கு டுவிஸ்ட். 


சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்து அஜித் படத்தை தயாரிக்க உள்ளதாம். ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்த விக்ரம் பிரபு முடிசூடா மன்னன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு பின்னர் தன் சொந்த தயாரிப்பில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். "தல" படத்துக்காக தன் படத்தை ஒத்தி வைத்துள்ளாராம். நல்ல நட்புக்கு இதுவும் ஒரு அடையாளம் தானே!


Find out more: